வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (19:05 IST)

"விரட்டி விரட்டி அடிக்கும் பேய்" அமலாபால் வெளியிட்ட ’கண்ணாடி’ ட்ரெய்லர்!

திகில் நிறைந்த ‘கண்ணாடி’ படத்தின் ட்ரெய்லரை நடிகை அமலாபால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


 
திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு தற்போது கண்ணாடி படத்தை இயக்கியுள்ளார். திரிலர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சுதீப் கிஷான் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தமிழில்  "யாருடா மகேஷ்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க செய்தார். கடைசியாக  இவரது நடிப்பில் வெளியான நரகாசுரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு  ஜோடியாக நடிகை அனன்யா சிங் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் கருணாகரன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள கண்ணாடி படத்தின் ட்ரைலரை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இந்த ட்ரெய்லருக்கு திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் ஜுலை 12-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.