வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: சனி, 12 ஜூலை 2014 (11:29 IST)

ஒருவாரம் முன்னதாக வெளிவரும் சதுரங்க வேட்டை

மனோபாலா தயாரித்திருக்கும் சதுரங்க வேட்டையை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. இந்த மாதம் 25 -ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ஒரு வாரம் முன்னதாக திரைக்கு வருகிறது.
அறிவித்த தேதியில் படத்தை வெளியிடவே தயாரிப்பாளர்களுக்கு நாக்கு தள்ளிவிடுகிற இந்த காலத்தில் அறிவித்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக 18 -ம் தேதியே படத்தை வெளியிடுகின்றனர். இதற்கு காரணம் ஜிகிர்தண்டா.
 
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் ஜிகிர்தண்டாவுக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சதுரங்க வேட்டையைப் போல இதுவும் ஆக்ஷன் த்ரில்லர். ரமலானை முன்னிட்டு இந்த மாதம் 25 ஜிகிர்தண்டா திரைக்கு வருகிறது. அதனுடன் மோதி ஓபனிங் கலெக்ஷனை இழப்பானேன் என்று ஒரு வாரம் முன்னதாக சதுரங்க வேட்டையை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர்.
 
ஜுலை 25 -ம் தேதிக்கு பதில் 18 -ம் தேதியே படம் திரைக்கு வருகிறது.