இறுதிகட்டத்தில் கத்தி - முருகதாஸ் ட்வீட்
கத்தி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் முதல் பகுதி முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடந்து வருவதாகவும் முருகதாஸ் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கத்தி படத்தை லைக்கா தயாரித்ததற்கு மாணவர்களும் வேறு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளனர்.
படத்தின் முதல் பகுதி வேலைகள் - டப்பிங் உள்பட முடிந்துவிட்டன. இரண்டாம் பகுதியில் சில பேட்ச் வொர்க் மட்டும் உள்ளது. அதுவும் முடிந்தால் இரு பாடல் காட்சிகள். அத்துடன் கத்தி ரிலீஸுக்கு தயாராகிவிடும்.
தீபாவளிக்கு ஐ, பூஜை படங்களுடன் கத்தியும் வெளியாகிறது.