இது கதிர்வேலனின் காதல் யுஎஸ்ஏ, யுகே, ஆஸ்ட்ரேலியா வசூல்
இது கதிர்வேலனின் காதல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சில இடங்களில் மட்டுமே படம் லாபம் சம்பாதித்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பு கூறுகிறது. அமெரிக்காவில் படம் நல்ல ஓபனிங்பை பெற்றுள்ளது. 14 ஆம் தேதி வெளியான படம் முதல் 3 தினங்களில் வடஅமெரிக்காவில் 16 திரையிடல்களில் 27,478 டாலர்களை வசூலித்தது. நமது ரூபாயில் 16.99 லட்சங்கள்.
யுகே மற்றும் அயர்லாந்தில் இப்படம் அதே மூன்று தினங்களில் 12,460 பவுண்ட்களை வசூலித்தது. எட்டு திரையிடல்களில் இந்த வசூலை அது பெற்றது. நமது ரூபாய் மதிப்பில் சுமாராக 12.89 லட்சங்கள்.