வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வெள்ளி, 27 ஜூன் 2014 (15:49 IST)

அஞ்சலிக்கு தடை - கன்னடத்தில் செல்லுபடியாகாத ஜாக்குவாரின் வேண்டுகோள்

களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க அஞ்சலியை அனுமதிக்க வேண்டும் என்று அஞ்சலிக்கு தடைகோரி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட ஃபிலிம் சேம்பருக்கு தென்னிந்திய பட அதிபர்கள் சங்கத்தின் (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த கடிதம் எங்குமே செல்லுபடியாகவில்லை.
 
அஞ்சலி கன்னடத்தில் தீரா ராணாவிக்ரமா என்ற படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் நடிப்பாரா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பதிலளித்துள்ளனர்.
 
அஞ்சலி மீதான தடை குறித்து முறைப்படி எந்தக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் அஞ்சலி நடிப்பதை தடை செய்ய முடியாது. கன்னட படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதுதான் எங்களுக்கு முக்கியம். அஞ்சலி மீதான தமிழ் திரையுலகின் தடை அங்கு மட்டும்தான் செல்லும் என தெரிவித்துள்ளனர்.
 

ஒவ்வெரு மொழியிலும் அந்தந்த மொழியின் பெயரில்தான் திரைப்பட சங்கங்கள் இயக்குகின்றன. மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம், கன்னட ஃபிலிம் சேம்பர் என்றுதான் இருக்கின்றன. தமிழில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். தென்னிந்திய என்று பெயர் இருந்தாலும் இவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் தமிழகத்தைத் தாண்டி பைசா விலையில்லை. அதற்கு அஞ்சலி தடை விவகாரமே சான்று. 
எனில் தமிழ் நடிகர்கள் சங்கம் என்று பெயர் மாற்றாமல் ஏன் இன்னும்  தென்னிந்தியாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?
 
இந்த வெற்று வீம்பை தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைவிடுவது அவர்களின் தன்மானத்துக்குதான் நல்லது.