திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (23:42 IST)

மெர்சல் சாட்டிலைட் உரிமை: ஜீடிவிக்கு கிடைத்த வெற்றி

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற மூன்று முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சி செய்தன 



 
 
இறுதியில் ஜிடீவிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆம், மிகப்பெரிய தொகை கொடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி பெற்றுள்ளது. ரஜினியின் '2.0' உள்பட பல பெரிய நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள ஜீடிவி தற்போது மெர்சல் படத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை முதல் மெர்சல் படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக ஆரம்பிக்க உள்ளதாகவும், புரமோஷனில் கலந்து கொள்ள விஜய் விரைவில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.