வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (08:33 IST)

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் நீக்கம் – ஜி தமிழ் அறிவிப்பு!

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி தொடரின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக ஜி தமிழ் அறிவித்துள்ளது.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷப்னம் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக இதில் இருந்து கார்த்திக் ராஜ் விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

இதை இப்போது ஜி தமிழ் நிறுவனமே டிவிட்டரில் உறுதி செய்துள்ளது.  அதில் ‘செம்பருத்தி தொடரின் வெற்றிக்காக கார்த்திக்கின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் எதிர்காலத்தில் கார்த்திக்கோடு இணைந்து ஜி தமிழ் பணியாற்றும்’ எனக் கூறியுள்ளது.