திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (11:23 IST)

துபாயில் செட்டில் ஆனாரா யுவன் ஷங்கர் ராஜா?

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா.  1996 ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தில் தன்னுடைய 16 ஆவது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறிய யுவன், தன்னுடைய பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார். ஆனால் திரைப்படங்களில் இன்னமும் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது யுவன் தனது குடும்பத்தோடு துபாயில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக தன்னுடைய இசையமைப்புப் பணிகளைக் கூட அவர் துபாயில் புதிதாக உருவாக்கியுள்ள ஸ்டுடியோவில் இருந்தபடிதான் செய்து வருகிறாராம். மேலும் தனக்குக் கதை சொல்ல வரும் இயக்குனர்களைக் கூட அவர் துபாய்க்கு அழைத்துதான் கதைக் கேட்கிறாராம்.