1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:49 IST)

இன்ஸ்டாகிராம் முடங்கியது ஏன்? யுவன்ஷங்கர் ராஜா விளக்கம்..!

யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென முடங்கியது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். 
 
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தற்போது விஜய் நடித்து வரும் கோட் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். 
 
இந்த படத்தின் சிங்கிள் பாடலான விசில் போடு என்ற விஜய் பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றாலும் ஒரு சிலர் இந்த பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்தனர். 
 
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் இன்ஸ்டாகிராமை டெலிட் செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் 
 
அந்த விளக்கத்தில் அவர் கூறிய போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் டெக்னிக்கல் காரணமாக முடங்கி இருப்பதாகவும் தன்னுடைய குழுவினர் அதை மீட்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் தனது இன்ஸ்டாகிராம்  பக்கம் செயல்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு தொழில்நுட்ப காரணம் என்பது தெரிய வந்துள்ளது. 
 
Edited by Mahendran