வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 மே 2021 (08:22 IST)

முதல் படத்துக்கு இசையமைக்கும் போது யுவன் இப்படி இருந்தார்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் யுவன்ஷங்கர் ராஜா.

இவர் தனது 16 ஆவது வயதில் சரத்குமார், பார்த்திபன் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் 2000 களில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இசையமைக்க ஆரம்பித்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படத்தை யுவனே தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.