திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:16 IST)

தல படத்திலிருந்து விலகிய யுவன்

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராகா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவா - அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
இதையடுத்து அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அஜித் நடித்த படங்களில் அவரது ஸ்டைலிஷ்க்கு ஏற்ற பொருந்தமான பின்னணி இசை யுவன் அமைத்தது பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனிருத் மற்றும் சாம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.