செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (11:49 IST)

பிரபல வில்லன் நடிகருக்குக் கொரோனா தொற்று!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். டிவிட்டரில் ‘இந்த பாஸிட்டிவ்(கொரோனா) நான் விரும்பாத ஒன்று. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இப்போது எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. விரைவில் குணமாகி வருவேன் என்று நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.