செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (19:43 IST)

அந்த விஷயத்தைக் கோலியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்! சேவாக் அட்வைஸ்!

ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என இளம் வீரர்கள் கோலியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என சேவாக் கூறியுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இப்போது விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்தது. இந்த போட்டியில் அறிமுகமான இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனாலும் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்காமல் அவர் அவுட் ஆனார். அதே போல இளம் வீரரான பண்ட்டும் சிறப்பாக விளையாண்டாலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் கோலி மட்டுமே இறுதிவரை களத்தில் நின்று 73 ரன்கள் சேர்த்தார் வெற்றியை நிறைவு செய்தார். இதுபற்றி பேசியுள்ள சேவாக் ‘ஒரு சிறப்பான தொடக்கம் அமைந்துவிட்டால் அதை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்பதை கோலியிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.