புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (08:40 IST)

இந்திய அணியில் மேலும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் வரவு – குழப்பத்தில் கேப்டன் கோலி!

இந்திய அணிக்காக நேற்று அறிமுகமான இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இப்போது விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்தது. இந்த போட்டியில் அறிமுகமான இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஏற்கனவே இந்திய அணியில் ரோஹித், ராகுல், தவான் ஆகிய மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது இஷான் கிஷானும் சிறப்பாக விளையாடியுள்ளதால் நான்காவது தொடக்க ஆட்டக்காரராக இணைந்துள்ளார். இதனால் கேப்டன் கோலிக்கு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்வதில் மேலும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இரண்டு போட்டிகளிலும் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.