செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:20 IST)

முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இயற்கை எய்திய இளம் இயக்குனர்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது இயக்குனராக முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் மனு ஜேம்ஸ். மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஜேம்ஸ், நான்சி ராணி என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் முடிந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 31. அவரின் இந்த மரணம் மலையாள சினிமா உலகினர் அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர்.