இவர்தான் ‘குட்டிக்கதை’க்கு உயிர் கொடுத்தவர்:

இவர்தான் ‘குட்டிக்கதை’க்கு உயிர் கொடுத்தவர்master yogi" width="740" />
Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (06:53 IST)
இவர்தான் ‘குட்டிக்கதை’க்கு உயிர் கொடுத்தவர்
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் நேற்று வெளியானது
 
அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை விஜய் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த பாடல் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் ஒரு சிலர் இந்த பாடல் மிகவும் ஸ்லோவாக இருப்பதாகவும் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்
 
இந்த இந்த நிலையில் இந்த பாடலுக்கு கலவையான விமர்சனம் வந்தபோதிலும் இந்த பாடலுக்கான கிராபிக்ஸ் காட்சிகள் மிக அருமையாக இருப்பதாக அனைத்து தரப்பினர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த பாடலுக்கு விஜய் மற்றும் காட்சி அமைப்புகளை கிராபிக்ஸில் உருவாக்கியவர் யோகி என்பவர். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கைதி படத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பதும் தற்போது மாஸ்டர் படத்திலும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடலின் ஒவ்வொரு வரிக்கேற்றவாறு ஓவியங்கள் அமைத்து அதனை கிராஃபிக்ஸ் அனிமேஷன் செய்த இவரது பணி மிகச் சிறந்ததாக இருந்ததாக அனைவரும் பாராட்டுகின்றனர் இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :