வாவ்... இந்த லுக் நல்லா இருக்கே - சீரியல் நடிகைக்கு குவியும் பாராட்டுக்கள்!

Papiksha Joseph| Last Modified சனி, 17 அக்டோபர் 2020 (17:17 IST)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இத்தரக்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது, வித்யாசமான தோற்றத்தில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். இந்த டான்ஸ் வீடியோவை முல்லை ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி தள்ளியுள்ளனர்.


Reel itஇதில் மேலும் படிக்கவும் :