1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (13:53 IST)

சீனியர் நடிகர் மேல் அளவற்ற அன்பு… யோகி பாபு சொன்னதைப் பகிர்ந்த இயக்குனர்!

மைக் மோகன் பல  வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கும் ஹரா படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இந்த படத்தில் யோகி பாபு நடிக்க சம்மதித்திருப்பதை உறுதி செய்து டிவீட் செய்துள்ளார். மேலும் அந்த டிவீட்டில் ‘ஹரா படத்தில் நடிக்க சம்மதித்ததில் மோகன் தன் மகிழ்ச்சியை தெரியபடுத்தினார்….  அதேபோல் நடிகர் யோகி பாபுவும் மோகன் சார் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் இருப்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்’ எனக் கூறியுள்ளார்.