திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:12 IST)

மகான் படத்தொல் நடிக்கும் வாய்ப்பை மறுத்த ’மைக்’ மோகன்!

சமீபத்தில் ரிலிஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள மகான் திரைப்படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

இந்நிலையில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், கதாநாயகனாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மகான் படத்தில் அவரை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் ஆசைப்பட்டுள்ளார். பாபி சிம்ஹா நடித்த சத்யவான் கதாபாத்திரத்துக்கு முதலில் அவரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போகவே பாபி நடித்தார். இப்போது மோகன் மீண்டும் கதாநாயகனாக ஹரா என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.