1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

நேற்று சூர்யாவுக்கு கிடைத்தது இரண்டு, இன்று கமலுக்கு கிடைத்தது ஒன்று!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, உலக நாயகனின் கமல்ஹாசனின் சிஷ்யன் என்பது உலகறிந்ததே. கமல்ஹாசனை போலவே கேரக்டராகவே மாறிவிடும் தன்மை உடையவர். மேலும் சூர்யாவின் தந்தையும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள்



 


இந்த நிலையில் நேற்று சூர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டில் 2 மில்லியன் பாலோயர்கள் பூர்த்தி ஆனார்கள். இந்த விஷயத்தை சூர்யாவின் ரசிகர்கள் நாள் முழுவதும் தனி ஹேஷ்டேக் உருவாகி கொண்டாடினர்.

சிஷ்யன் சூர்யாவின் டுவிட்டர் அக்கவுண்ட் 2 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற மறுநாளே குரு கமல்ஹாசனின் டுவிட்டர் அக்கவுண்ட் ஒரு மில்லியன் பாலோயர்களை இன்று பெற்றுள்ளது. இன்று கமல் ரசிகர்கள் இதை டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.