1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (13:38 IST)

அஜித் படமென்றால் என்ன வேடம் என்றாலும் ஓகே – இளம் நடிகையின் ஆசை !

இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் தன்னுடைய பேவரைட் நடிகர் யாரென்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் யாஷிகா ஆனந்தை தமிழக இளைஞர்கள் அடையாளம் கண்டது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமே. பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டு மஹத்துடன் கடலை போட்டதன் மூலம் இன்னும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸை விட்டு வெளியே வந்துள்ள நிலையில் இப்போது மஹத்துடன் ஒரு படத்திலும் யோகி பாபுவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நீங்கள் யாருடைய ரசிகை என்ற கேள்விக்கு ‘நான் தல ரசிகை… எப்போதுமே அவர்தான் என் பேவரைட். அவரது படத்தில் background காட்சியில் நடித்தால் கூட போதும்’ எனத் தெரிவித்துள்ளார்.