1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:24 IST)

லவ் எல்லாம் செட் ஆகாது… திருமண செய்தியை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமன செய்தியை சமூகவலைதளப் பக்கம் மூலமாக அறிவித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன.

இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் பலியானது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சோகத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். சிகிச்சையில் முழுவதும் குணமாகிவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் இப்போது திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரின் சமூகவலைதளப் பதிவில் ‘எனது திருமன செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எனது பெற்றோர்கள் திருமனத்துக்கு சம்மதித்துள்ளனர். வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டிய நேரம் இது. நான் எப்போதும் சினிமாவை நேசிக்கிறேன். உங்களை எப்போதும் மகிழ்விப்பேன். இது பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணம். காதல் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.