1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (21:46 IST)

என்ன அடக்கம் என்ன ஒடுக்கம்... ஹோம்லி லுக்கில் அசத்தும் யாஷிகா!

'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார்.

அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.
 
பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகிய பச்சை நிற சேலையில் ஹோம்லி லுக்கில் துளி கவர்ச்சி காட்டாமல்  செமயா போஸ் கொடுத்து டீசண்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார். கவர்ச்சி நடிகையின் அச்சம் ,நாணன் , மடம்,  பயிர்ப்பு பார்த்து அசந்துவிட்டனர்.