வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (13:28 IST)

ரஜினி & லோகேஷ் படத்தில் பேன் இந்தியா ஹீரோ!

விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்துக்குப் பிறகு லோகேஷ், இப்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கபட்ட நிலையில் இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்து லோகேஷ், ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இது ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ், தில் ராஜு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஹோம்பாலே பிலிம்ஸ் என பல மொழி தயாரிப்பாளர்களும் லோகேஷை நச்சரிக்கிறார்களாம். இதனால் லோகேஷின் சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க கேஜிஎஃப் புகழ் யாஷிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினிதான் யாஷை அனுக சொல்லி லோகேஷிடம் ஆலோசனை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.