வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : திங்கள், 10 ஜூலை 2017 (10:07 IST)

“தனுஷுடன் பணியாற்றுவது செம ஜாலி” – கஜோல்

‘தனுஷுடன் பணியாற்றியது செம ஜாலியாக இருந்தது’ என பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

 
 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், கஜோல், அமலா பால் நடித்துள்ள படம் ‘விஐபி 2’. 2014ஆம் ஆண்டு  வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அதை, ஒளிப்பதிவாளர்  வேல்ராஜ் இயக்கியிருந்தார்.
 
20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள கஜோல், இதன் முதல் பாகத்தைப் பார்க்கவே இல்லையாம். எனவே, முதல் பாகத்தின் கதையைச் சொல்லி, அதன்பிறகு இரண்டாம் பாகத்தின் கதையைச் சொல்லி கஜோலிடம் ஓகே வாங்கியிருக்கிறார்கள்.
 
“தனுஷுடன் பணியாற்றுவது ஜாலியாக இருந்தது. இந்தப் படத்துக்கு அவரே திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதால்,  ஒவ்வொரு ஸீனிலும் இன்வால்வ்மென்ட்டாக இருந்தார்” என்று கூறியுள்ளார் கஜோல். தனுஷின் பிறந்தநாளான இம்மாதம்  28ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.