1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2020 (18:01 IST)

வொண்டர் வுமன் நாயகிக்கு பிடித்த 10 பெண்கள்: இந்திய பெண்ணும் ஒருவர்!

வொண்டர் வுமன் நாயகிக்கு பிடித்த 10 பெண்கள்
சமீபத்தில் வெளியான வொண்டர் வுமன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை கேல் கெலாட். இன்றுடன் 2020 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டில் தனக்கு பிடித்த பத்து பெண்கள் குறித்து ஒரு கருத்தை நடிகை கேல் கெலாட் பதிவு செய்துள்ளார்
 
உலகம் முழுவதும் தனக்கு பிடித்த பத்து பெண்களின் புகைப்படங்களையும் தனக்கு ஏன் அவர்கள் பிடித்தார்கள் என்பதையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த 10 ஆண்டுகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்தியாவை சேர்ந்த சமூக போராளி 82 வயது பில்கிஸ் தாதி என்பவர்தான் அந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகை கேல் கெலாட் அவர்களால் சிறந்த பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட  சமூக போராளி பில்கிஸ் தாதி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற 10 வொண்டர் வுமன்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும் அதிலும் 82 வயது சமூகப் போராளி என்பதிலும் இந்திய பெண்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது