1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (13:22 IST)

மூன்று விருதுகளை தட்டி சென்ற இறுதிச்சுற்று: ஐஐஎப்ஏ விருதுகள் முழு விவரம்!

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) விருது வழங்கும் விழா ‘ஐஃபா உற்சவம்’ என்ற பெயரில் ஐதராபாத்தில்  நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படத்துறைக்கான விருது  வழங்கும் இவ்விழாவில், நேற்று தமிழ், மலையாளப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
 
மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து தமிழில் வெளிவந்த வெற்றி படம் இறுதிச்சுற்று. சுதா கோங்கரா இயக்கிய படத்துக்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இந்தப் படம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐஐஎஃஏ விருது (சர்வதேச  இந்தியத் திரைப்பட அகாடமி) வழங்கும் விழாவில் அதிக விருதுகளைத் தட்டிச் சென்ற படங்களில் ஒன்றாக  கெளரவிக்கப்பட்டது. மலையாள திரையுலகுக்கான ஐஐஎஃஏ விருதுகளில், சார்லி படம் அதிகபட்சமாக ஏழு விருதுகளைப்  பெற்றது.
 
சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உள்ளிட்ட 13 விருதுகளில் 3 விருதுகள் இறுதிச்சுற்று படத்துக்கு கிடைத்தது. இதேபோல நானும்  ரெளடிதான் படத்துக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த பாடகர், பாடகி என மூன்று விருதுகள் கிடைத்தன. தெறி படமும்  சிறந்த இயக்குநர், சிறந்த வில்லன், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று விருதுகளை பெற்றது. அச்சம் என்பது மடமையடா  படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது.

 
விருது விவரம் வருமாறு:
 
சிறந்த படம்: இறுதிச்சுற்று
 
சிறந்த நடிகர்: மாதவன் (இறுதிச்சுற்று)
 
சிறந்த நடிகை: ரித்திகா சிங்.(இறுதிச்சுற்று)
 
இயக்குனர்: அட்லி (தெறி)
 
துணை நடிகை: பேபி நைனிகா(தெறி)
 
துணை நடிகர்: நாகார்ஜுனா( தோழா)
 
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா).
 
பாடகர்: அனிருத் (நானும் ரவுடிதான்)
 
நகைச்சுவை நடிகர்: ஆர்.ஜே.பாலாஜி (நானும் ரவுடிதான்).
 
வில்லன்: மகேந்திரன் (தெறி).
 
சவுண்ட் மிக்சிங்: உதய்குமார் (சென்னை 28-2).
 
எடிட்டர்: கிஷோர் ( விசாரணை).
 
சிறந்த கதை: கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு).
 
பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ் (நெருப்புடா).
 
பாடகி: நீதிமோகன்
 
மலையாள விருது விவரம்:
 
சிறந்த படம்: புலிமுருகன்
 
சிறந்த நடிகர்: துல்கர் சல்மான் (சார்லி)
 
சிறந்த நடிகை: ராஜிஷா
 
இயக்குனர்: மார்டின் பிரக்கத்(சார்லி)
 
துணை நடிகை: அபர்ணா கோபிநாத்
 
துணை நடிகர்: விநாயகன்
 
இசையமைப்பாளர்: கோபிசுந்தர்
 
பாடகர்: விஜய் யேசுதாஸ்
 
வாழ்நாள் சாதனையாளர் விருது, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்பட்டது. நடிகைகள் கேத்ரின் தெரெசா, ஹன்சிகா, அக்ஷரா ஹாசன், நடிகர் ஜீவா ஆகியோர் நடனமாடினர்.