ரஜினியுடன் மோதும் ரஜினி

Cauveri Manickam (Sasi)| Last Updated: வெள்ளி, 16 ஜூன் 2017 (13:03 IST)
பா.இரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தில், ஒரு போலீஸ் கேரக்டருக்கு ரஜினியின் நிஜப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில், ‘சென்னை 28’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அரவிந்த் ஆகாஷ் மும்பை போலீஸாக நடிக்கிறார். படத்தில் அவருடைய பெயர், சிவாஜி ராவ் கெய்க்வாட். ரஜினியின்  நிஜப்பெயர் இதுதான். சினிமாவுக்காகத்தான் ரஜினிகாந்த் என மாற்றிக் கொண்டார்.
 
தாதாவாக நடிக்கும் ரஜினியை, போலீஸ் கைது செய்தால் ரசிகர்கள் கோபம் கொள்வர். அதேசமயம், ரஜினியின் நிஜப்பெயரைக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி கைது செய்தால், ‘ரஜினி தான் ரஜினியைக் கைதுசெய்தார்’ என்று சமாதானம்  அடைந்துவிடுவர் என்ற எண்ணத்தில் தான் அந்த கேரக்டருக்கு ரஜினியின் நிஜப்பெயரை வைத்தார்களாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :