சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:11 IST)

''என் அன்பு மகன் விஜய்யுடன்''- எஸ்.ஏ..சி டுவீட்...வைரல் புகைப்படம்

sac vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் தந்தை டுவிட்டரில் கணக்குத் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஒரு முக்கிய பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் 80 வது பிறந்த நாள் விழாவை அவர் தன் மனைவி ஷோபாவுடன் கொண்டாடினார். இவர்கள் இருவரும் மட்டும் தனியாக கேக் வெட்டி கொண்டாடியது பெரிதும் பேசப்பட்ட நிலையில், விஜய்யையும் பலரும் விமர்சித்தனர்.தந்தை எஸ்.ஏசிக்கும், விஜய்ய்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் பேசப்பட்டது. இந்த   நிலையில், டுவிட்டரில் புதிய அக்கவுண்ட் துவக்கியுள்ள எஸ்.ஏ.சி தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று என் முதல் படமாக் என் அன்பு மகன் விஜய்யுடன் நானிருக்கும் புகைப்படத்தை பதிவிடுகிறேன் எனப் பதிவிட்டிருந்தார். இது வைரலாகி வருகிறது.