வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (16:07 IST)

அஜீத்துடன் மோதும் தெலுங்கு நடிகர்?

அஜீத்தின் படம் ரிலீஸாகும் நாளில், தன்னுடைய படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் தெலுங்கு நடிகரான  மகேஷ்பாபு.

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிவரும் இந்தப் படம், மகேஷ்பாபுவுக்கு நேரடியான முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தில் மகேஷ்பாபு  ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். ஜூன் 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால், க்ளைமாக்ஸ் காட்சியை மறுபடியும் ஷூட் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்திருப்பதால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தாமதமாகின்றன. எனவே, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அன்றுதான் அஜீத், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘விவேகம்’ படமும் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது. அப்படி ரிலீஸானால், மகேஷ்பாபுவுக்கு அஜீத்துடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.