திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (06:23 IST)

ஜெயலலிதாதான் உயிருடன் இல்லையே! அப்ப அது உதயநிதிக்கு கிடைத்துவிடும்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்கள் 'யூ' சர்டிபிகேட் கிடைத்தாலும் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காத நிலைதான் இதுவரை இருந்தது. ஏனெனில் அவர் திமுக தலைவரின் வாரிசு என்பதால் கடந்த ஜெயலலிதா அரசு அவரை கட்டம் கட்டி 'மனிதன்' என்ற படத்தின் பெயரை கூட தமிழ்ப்பெயர் இல்லை என்று கூறி மறுத்துவந்தது. உதயநிதியும் சளைக்காமல் கோர்ட்டுக்கு சென்று வருகிறார் என்பது வேறு விஷயம்



 


இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் நேற்று சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த முறை கண்டிப்பாக உதயநிதிக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்றும் ஏனெனில் ஜெயலிதாதான் இப்போது உயிருடன் இல்லையே என்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

உதயநிதி, ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எழில் இயக்கியுள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமார் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.