மீண்டும் நடிக்க வருகிறாரா சிவகுமார்…. ராஜு முருகனின் திட்டம் பலிக்குமா?
இயக்குனர் ராஜு முருகன் சிவகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் கடைசியாக நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கு முன்னதாக அவர் எழுத்தாளர் ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகுமாரை நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாராம். சிவகுமார் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த திட்டத்தை ராஜு முருகன் தள்ளிவைத்து விட்டு கார்த்தி படத்தில் கவனம் செலுத்துகிறாராம்.