திமுகவுக்கு வாழ்த்து சொல்லாத வடிவேலு…. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திராவிட முன்னேற்றக் கழகம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது. அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் இப்போது முதல்வராக பதவியேற்றுள்ளார். இதையடுத்து திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சம்மந்தமே இல்லாத சினிமா பிரபலங்கள் கூட வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் 2011 ஆம் ஆண்டு திமுக கூட்டணிக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்த வடிவேலு எந்தவொரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. ஸ்டாலினையும் சந்திக்கவில்லை. இது வடிவேலு ரசிகர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.