வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (16:39 IST)

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு வாய்ப்பளித்த அஜித்… ஆனால் அவர் சொன்ன வார்த்தையால்?

நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா.

பிரேமபுஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் அஜித். அதே படம் தமிழில் ரீமேக் ஆன போது அதில் அஜித்தையே கதாநாயகனாக்கியவர் இயக்குனர் செல்வா. அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு ஆரம்ப காலங்களில் ஒரு வழிகாட்டியாகவும் இருந்தவர் செல்வா.

ஆனால் அதன் பின்னர் இருவரும் இணைந்து படங்கள் பணிபுரியவில்லை. இந்நிலையில் தான் பெரிய கதாநாயகன் ஆன பின்னர் அஜித் அவரை அழைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம். ஆனால் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களை எல்லாம் நான் தேர்வு செய்து சொல்கிறேன். நீங்கள் படத்தை இயக்கி மட்டும் கொடுங்கள் எனக் கூறினாராம். அதற்கு காரணம் அப்போது செல்வா பெரிதாக எந்த படங்களையும் இயக்காமல் நீண்ட இடைவெளியில் இருந்தார்.

ஆனால் அஜித்தின் ஆலோசனையைக் கேட்காமல் செல்வா ‘உன் அறிமுகப் படத்தில் நீ இவ்வளவு நிபந்தனைகளோடுதான் நடிக்க வந்தாயா?’ எனக் கேட்டதால் அஜித் அந்த படத்தை அப்படியே கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.