புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (18:19 IST)

ரஜினி பங்கேற்கும் மேன் vs வைல்ட் கர்நாடகாவில் ஏன் ?

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் vs வைல்ட் கர்நாடகாவில் ஏன் என பதில் கிடைத்துள்ளது. 
 
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. காட்டுக்குள் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ் காட்டில் உள்ள பொருட்களை உண்டு, அங்குள்ளவற்றை வைத்தே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு பயணித்து அங்கிருந்த்து தப்பிப்பார்.
 
பிரபலமான இந்த தொடரில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த தொடர் இந்தியா முழுவதும் பரவலாக பாராட்டுகளை பெற்றது. தற்போது மேன் வெர்சஸ் வைல்ட் தொடரில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இந்த ஸ்பெஷல் தொடருக்கான படப்பிடிப்புகள் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய வனப்பகுதில் படமாக்கப்பட உள்ளது. இந்த வனப்பகுதி யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
 
பந்திப்பூரில் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஜினி பந்திபூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளார். முதலில் ரஜினி படப்பிடிப்பை வடமாநில காட்டு பகுதிகளில் நடத்த முதலில் திட்டமிட்டதாகவும் அதற்கு இயற்கை ஆர்வலர் பிரசாந்த் எதிர்ப்பு தெரிவித்ததால் படப்பிடிப்பை மைசூரு காட்டு பகுதிக்கு மாற்றி உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.