1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (08:44 IST)

சென்னையில் 10 நாட்கள் அண்ணாத்த படப்பிடிப்பு! பரபரக்கும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பிலிம் ஸிட்டியில் 10 நாட்களுக்கு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து அடுத்த அப்டேட்டாக அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாம். முன்னதாக ஹைதராபாத்தில் நடக்க இருந்த படப்பிடிப்பு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் தேர்தல் நெருங்குவதால் ரஜினி வீட்டு முன்பு கூடி அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் ரஜினி படப்பிடிப்பில் இருந்தாலாவது தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறாராம்.