விஜய் முதல்வரானா என்ன தப்பு? கொளுத்திப்போடும் எஸ்.ஏ.சந்திரசேகர்

vijay
Last Modified புதன், 20 ஜூன் 2018 (10:31 IST)
விஜய் முதல்வரானா என்ன தப்பு என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுள்ளார்.
நடிகர் விஜய் வரும் 22ந்தேதி, அவரது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனையொட்டி விஜய் ரசிகர்கள் தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார். வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே, தத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே என்றெல்லாம் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
post
இந்நிலையில் இதுகுறித்து பேசிய விஜய்யின் தந்தை எச்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் வைப்பது புதிதல்ல. அவர்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்பால் அவரை வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் அடிக்கிறார்கள்
sac
விஜய் முதல்வராக வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதில் தவறு எதுவும் இல்லையே என கேள்வி எழுப்பினார். விஜய் புதுக்கட்சி துவங்கினால் அவரது ரசிகர்கள் பேராதரவு கொடுப்பார்கள் என எஸ்.ஏ.சி தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :