1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:01 IST)

துப்பாக்கி 2 டைட்டிலை தாணு தரமறுப்பது ஏன்? இதுதான் காரணமா?

விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கு துப்பாக்கி 2 டைட்டிலை தரமுடியாது என கலைப்புலி தாணு கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ இன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் ’துப்பாக்கி-2’ என வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஏஆர் முருகதாஸ் விரும்பியதாகவும், ஆனால் கலைப்புலி தாணு அவர்கள் அந்த டைட்டிலை தரமுடியாது என உறுதியாக கூறிவிட்டதால் டைட்டில் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய்க்கு நெருங்கிய தயாரிப்பாளராக அறியப்பட்ட விஜய்க்கு ஏன் தாணு டைட்டிலை தர மாட்டேன் என்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் இவர்கள் இருவரும் கடைசியாக பணிபுரிந்த தெறி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் மீண்டும் விஜய் தனக்கு கால்ஷீட் தருவார் என எதிர்பார்த்துள்ளார் தாணு. அப்படி விஜய் தராததால் அவர் மேல் அதிருப்தியில் இருந்துள்ளார். அதனால் தான் இப்போது துப்பாக்கி 2 டைட்டிலை தர மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.