வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:18 IST)

தன்னிஷ்டத்துக்கு நடந்துகொண்ட தயாரிப்பாளர்… வெட்டி விட்ட விஜய்- தளபதி 69 பட சிக்கல்!

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருந்த டிவிவி நிறுவனத்தின் தானய்யா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக நேற்று முதல் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தில் தானய்ய விலகியதற்குக் காரணம் அவர் மேல் விஜய்க்கு ஏற்பட்ட கோபம்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

விஜய்யிடம் அந்த படத்துக்கான முறையான ஒப்பந்தங்கள் எதுவுமே போடாமல் தானய்யா அதற்குள்ளாகவே படத்தை வியாபாரம் செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டாராம். இது விஜய்க்கு பிடிக்காததால் அவரை படத்தில் இருந்து கழட்டிவிட்டு விட்டாராம். இதையடுத்து படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.