1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (22:30 IST)

பிகில் படத்தின் சக்சஸ் மீட் வைக்காதது ஏன்?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படம் முதல் நான்கு நாட்கள் மிகப்பெரிய வசூலை பெற்று வந்தாலும் ஐந்தாவது நாளில் இருந்து வசூல் குறைந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த படம் தற்போது ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
ரூபாய் 180 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதால் இந்த படம் வசூல் அளவில் ஒரு வெற்றிப்படம் என்பது உறுதியாகிறது. இந்த நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் எல்லாம் சக்சஸ் மீட் வைத்து வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் பெரிய பட்ஜெட் படமான பிகில் படத்தின் சக்சஸ் மீட் ஏன் இன்னும் கொண்டாடப்படவில்லை என விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன
 
விஜய் தற்போது டெல்லியில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாலும் ஏஆர் ரஹ்மான் துபாயில் ஒரு இசை நிகழ்ச்சியில் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதால் சக்சஸ் மீட் வைக்கப்படவில்லை என தயாரிப்பு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியது 
 
இருப்பினும் இந்த படத்தின் உண்மையான வசூல் நிலவரம் கவலைக்குரியதாக இருப்பதால் இந்த நேரத்தில் சக்சஸ் மீட் தேவையா என்று தயாரிப்பு நிறுவனம் கருதுவதாகவும் ஒரு கரு ஒரு தகவல் வெளியாகி உள்ளது
 
உண்மையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் ஏன் வைக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது