1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (18:39 IST)

பாஞ்சாலியாக நடிக்கும் நயன்தாரா?

கன்னடப் படமொன்றில், பாஞ்சாலியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள்.
 
 
13 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்துவரும் நயன்தாரா, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்யம்’ படத்தில், சீதையாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது,  தினமும் விரதம் இருந்து பயபக்தியுடன் நடித்தார். அதைப் பார்த்து, தற்போது கன்னடத்தில் உருவாக இருக்கும் ‘குருஷேத்திரா’  என்ற படத்தில், பாஞ்சாலியாக நடிக்கக் கேட்டுள்ளனர்.
 
நாகண்ணா இயக்கும் இந்தப் படத்தில், தர்ஷன் துரியோதனனாகவும், ரவிச்சந்திரன் கர்ணனாகவும், மூத்த நடிகர் அம்ரிஷ் பீஷ்மர்  வேடத்திலும் நடிக்கின்றனர். கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ள நயன், இந்தப் படத்துக்கு எப்போது ஓகே சொல்வார்  என்று தெரியவில்லை.