ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:13 IST)

சண்டக்கோழியான பூனர் கவுர்

பூனம் கவுர் இப்போது தமிழ் படங்களிலும் இல்லை இந்திப் படங்களிலும் இல்லை. சூப்பர் 2 என்ற தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியில் அம்மணி பிஸி.


 
 
சமீபத்தில் அவர் பாம்புகளுடன் ஒரு அதிபயங்கர சண்டைக் காட்சியில் நடித்தார். அந்த சண்டை தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
பூனம் கவுரின் எப்போதைக்குமான பயம் தண்ணீரும், பாம்புகளும். பாம்புகளுடன் ஒரே பாக்சில் நேரத்தை செலவிட்டிருக்கிறார் பூனம். அதுவொரு சண்டைக் காட்சி. அதில் நடித்த பின் தனது ஆழ்மனதில் உறைந்திருந்த பயம் போய்விட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
சரி, எப்போது சினிமாவுக்கு வரப்போகிறாராம்?
 
முதலில் ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளாராம். அதனைத் தொடர்ந்து தமிழுக்கு வர திட்டமாம்.
 
ராம. நாராயணன் இருந்திருந்தால் பாம்பையும், பூனத்தையும் வைத்து ஒரு படமே எடுத்திருப்பார்.