வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (12:53 IST)

அமலா பாலின் கள்ளக்காதலன் யார் தெரியுமா?

திருட்டுப் பயலே’ இரண்டாம் பாகத்தில், அமலா பாலின் கள்ளக்காதலனாக பிரசன்னா நடித்துள்ளார்.


 


ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, மனோஜ் கே ஜெயன், விவேக் நடிப்பில், கடந்த 2006ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘திருட்டு பயலே’. சுசி கணேசன் இயக்கிய இந்தப் படம், பிளாக் பஸ்டர் ஹிட். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுசி கணேசன். பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், செளந்தர்ராஜா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீஸரை, நேற்று மாலை வெளியிட்டார் அமலா பால். அதன்படி பார்த்தால், அமலா பாலுக்கும், பிரசன்னாவுக்கும் கள்ளக்காதல் இருக்கிறது. அதை, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒட்டு கேட்கிறார் பாபி சிம்ஹா. பிறகு, அதை வைத்து இருவரிடமும் பணம் பறிப்பதாகக் கதை செல்லும் போலத் தெரிகிறது.