ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (11:04 IST)

சிம்பு என்ன லூசா? ரசிகர்களை உசுப்பேற்றும் வீடியோவால் கடுப்பான நெட்டிசன்கள்

சிம்பு தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோவால் நெட்டிசன்கள் கடுப்பாகி அவரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர்.
சமீபத்தில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டார் அதில் தனது படம் வெளியாகும் தினத்தில் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைப்பது, அதற்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவையோ, அப்பாவுக்கு ஒரு சட்டையோ வாங்கி கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
 
சிம்புவின் இந்த வீடியோவுக்கு பெரும் பாராட்டு கிடைத்த போதிலும் ஒருசிலர் சிம்புவுக்கு இருப்பதே ஒன்றிரண்டு ரசிகர்கள் தான். இதற்கு இந்த பில்டப் தேவையா? என்று கலாய்த்தனர்.
 
இதனால் கடும் கோபமடைந்த சிம்பு, தனது மாஸை நிரூபிக்க ''வந்தா ராஜாவாதான் வருவேன்' பட ரிலீசின்போது எனது ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பாலாபிஷேகம் செய்யுங்க, வேற லெவலில் கொண்டாடுங்க' என்று ஒரு வீடியோ மூலம் கூறியுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமூகவலைதளத்தில் பலர் சிம்பு என்ன லூசா? சமீபத்தில் யாரும் என படத்துக்கு  கட் அவுட் வைப்பது,  பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கூறிவிட்டு தற்பொழுது அவரின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஏன் இப்படி ரசிகர்களை பலிகடா ஆக்குகிறார். பிரபலம் என்றாலே சர்ச்சைகள் இருக்கும். இதனை கூட சிம்புவால் சகித்து கொள்ள முடியாதா? பேசுபவர்கள் பேசிக்கிட்டே இருக்கட்டும் என விடாமல், ரசிகர்களை இப்படி உசுப்பேத்துவது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.