1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:36 IST)

தனுஷ் படத்தில் சசிகுமார்?

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் சசிகுமார் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகிவரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தர்புகா ஷிவா இசையமைக்கிறார். சில பிரச்னைகளால் கிடப்பில் இருந்த இந்தப் படம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் புத்துயிர் பெற்றது.
 
சில நாட்கள் இந்தப் படத்தில் நடித்த தனுஷ், அதன்பிறகு பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி 2’ படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். இது முடிந்ததும் மீண்டும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் நடிப்பார் என்று தெரிகிறது.
 
அப்போது சசிகுமாரும் தனுஷுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். சில நிமிடங்கள் வரக்கூடிய கெஸ்ட் ரோலில் தான் நடிக்கப் போகிறாராம் சசிகுமார். ஏற்கெனவே ராணா டகுபதியும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.