திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (12:48 IST)

தனுஷ் இயக்கத்தில் விஜய் பட வில்லன்

தனுஷ் இயக்கிய முதல் படமான 'ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது. இதனையடுத்து அவர் விரைவில் 2வது படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் ஹீரோ உள்பட நடிகர், நடிகைகள் குறித்து இதுவரை எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது

இந்த நிலையில் விஜய்யின் 'புலி', மற்றும் 'நான் ஈ' உள்பட பல படங்களில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பெங்களூரில் சுதீப்பை சந்தித்த தனுஷ், தன்னுடைய இயக்கத்தில் நடிக்க சுதீப்பிடம் சம்மதம் பெற்றுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தனுஷ், சுதீப் முதல்முறையாக இணையும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.