1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (18:56 IST)

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமா ‘ஜுங்கா?’

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமா ‘ஜுங்கா’? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் இயக்குநர்.
 
விஜய் சேதுபதி நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. 2013ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தை, கோகுல் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி ஜோடியாக நந்திதா நடித்த இந்தப் படத்தில், இன்னொரு ஜோடியாக அஸ்வின் - ஸ்வாதி நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ உள்ளிட்ட பல வசனங்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.
 
இந்நிலையில், மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் கோகுல். கதைப்படி, வெளிநாட்டில் வசிக்கும் டானாக அவர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சயீஷா, மடோனா செபாஸ்டியன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங், பாரிஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது.
 
இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் கோகுல், “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா ஜுங்கா? என்று கேட்கிறார்கள். நான் ஏற்கெனவே எடுத்த படத்தை மறுபடியும் இயக்குவதில்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமல்ல இது. அதற்கும் மேலேயே இருக்கும். ஆக்‌ஷன், காமெடி எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.