செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (16:58 IST)

பண பரிமாற்ற வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 
இந்த வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் UPI கொண்டு செயல்படுத்த படுகிறது. UPI மூலம் பண பரிமாற்றம் செய்வது மிகவும் சுலபமாகவும் உள்ளது.
 
பண பரிமாற்றத்துக்கு மற்றவர்களுடைய அக்கவுண்ட் நம்பர் தேவையில்லை எனவும், ஒருவருடைய மொபைல் எண் இருந்தால் போதும், மற்றவர்கள் அவர்களுக்கு எளிதில் பணம் மாற்றம் செய்யலாம். 
 
கூகுள் நிறுவனத்தின் TEZ பண பரிமாற்ற செயலி போட்டியாக தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் களமிறங்கியுள்ளது.