ஜல்லிக்கட்டுன்னா என்ன...? - விளக்கம் தந்த ஆர்யா!
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை விலக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில், ஜல்லிக்கட்டுன்னா என்ன என்று கேட்டிருந்தார் நடிகர் ஆர்யா.
ஏற்கனவே ஆர்யாவுக்கு ரொமான்டிக் ஹீரோ, ரொமான்ஸை தவிர எதுவும் தெரியாது என்று நல்ல பெயர். இந்த கேள்வி கேட்டதும் ட்விட்டரில் மக்கள் பொங்கிவிட்டனர். இன்று அப்படியொரு சந்தேகம் கேட்டதற்கு ஆர்யா விளக்கமளித்தார்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் கவனம் ஏற்படுத்தவே அப்படியொரு சந்தேகத்தை எழுப்பினேன். ஜல்லிக்கட்டை பற்றி இதற்கு முன்பும் பின்பும் நான் பேசிய நல்ல விஷயங்கள் யாருக்கும் தெரியாது என்றார்.
அதாவது, ஆர்யாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்தானாம்.