1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (16:18 IST)

''விஜய்-66'' பட ரிலீஸ் தேதி என்ன? முக்கிய தகவல்....ரசிகர்கள் குஷி

''விஜய்66'' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் நடிப்பில் உருவாகிவரும் படம்  பீஸ்ட். இப்படத்தின் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்தும, விஜய், விஜய்66 படத்திற்கு தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், சென்டிமென்ட் படமாக உருவாகவுள்ளதாகவும், இப்படம் தெலுங்கில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகாவும், இப்படத்தின் இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,விஜய்66 படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்ப்புள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது.